ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள பிள்ளை காளியம்மன், பெரிய மாரியம்மன், வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள பூமாரி அம்மன், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வெட்டுடையாள் காளியம்மன், ராமேசுவரம் உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.