ரூபாய் நோட்டு அலங்காரம்
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.