அம்மா உணவகம் முழுமையாக செயல்பட வேண்டும்

அம்மா உணவகம் முழுமையாக செயல்பட வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-05-10 19:03 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட், திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி ரோடு ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இதில் சிவகாசி அம்மா உணவகத்தில் காலை இட்லி வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு தலா 5 இட்லிகள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 200 பேருக்கு காலை சிற்றுண்டி கிடைக்கிறது. மதிய நேரத்தில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என தினமும் ஒரு வகையான சாதம் வழங்கப்படுகிறது. மதியம் நேரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அம்மா உணவகத்துக்கு வந்து சாப்பிடுகிறார்கள். சிவகாசி அம்மா உணவகத்தின் மூலம் தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் உணவு அருந்துகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக போதிய உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் செயல்பட்டதை போல் அம்மா உணவகம் முழுமையாக செயல்பட தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்