தென்காசியில் சிறப்பாக செயல்படும் அம்மா உணவகம்

தென்காசியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Update: 2022-09-19 20:42 GMT

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. தென்காசியில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. அந்த பகுதியிலேயே மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளதால், அங்கு வருபவர்கள், பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி ரெயில்வே மேட்டுத்தெருவை சேர்ந்த வேன் டிரைவர் ஜெகன் கூறுகையில், 'எனது வீட்டில் வெளியூருக்கு சென்று விட்டால் நான் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுவேன். இங்கு பல நாட்கள் நான் சாப்பிட்டு உள்ளேன். காலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதமும், 3 ரூபாய்க்கு தயிர் சாதமும் வழங்கப்படுகிறது. உணவு தரமாகவும், சுவையாகவும், போதுமானதாகவும் உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டாலும் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர்' என்றார்.

இதேபோல், சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டையிலும் அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறது. கூட்டம் நன்றாக உள்ளது. கடையநல்லூர் அம்மா உணவகத்தில் முன்பு போல் கூட்டம் இல்லை என்றும், சுமாரான உணவு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் ெதரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்