கல்லட்டி மலைப்பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது-டிரைவர் உள்பட 2 போ் உயிர்தப்பினர்

கல்லட்டி மலைப்பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவா் உள்பட 2 பேர் உயிர்தப்பினர்.

Update: 2023-06-09 19:00 GMT

ஊட்டி

கல்லட்டி மலைப்பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவா் உள்பட 2 பேர் உயிர்தப்பினர்

சாலையோர தடுப்பில் மோதியது

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மசினகுடியில் இருந்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியுடன் வந்தது. நோயாளியை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இறக்கி விட்ட பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மீண்டும் மசினகுடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த தடுப்பில் பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உயிர்தப்பினர்

இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன், மருத்துவ உதவியாளர் பிரதாப் ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனாலும் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்கும் பணிகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்