ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-22 18:45 GMT

களியக்காவிளை, 

காதலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்புலன்ஸ் டிரைவர்

கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முக்கோலக்கல் வீட்டை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவருடைய மகன் அலன் (வயது 25), ஆம்புலன்ஸ் டிரைவர்.

இவர் தற்போது களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குளப்புறத்தை அடுத்த அன்னிக்கரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்ததில் இருந்து அலன் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்