கல்லூரி மாணவரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
கல்லூரி மாணவரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மகன் தனுஷ் (வயது 19). இவர் விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் எதிரே நின்றுகொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் தனது ஆம்புலன்ஸ் கண்ணாடியை தனுஷ்தான் உடைத்ததாக கூறி தகராறில் ஈடுபட்டார். பின்னர் மணிகண்டன், தினேஷ் (20), பாலமுருகன் (35) ஆகியோர் சேர்ந்து தனுசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணிகண்டன் உள்பட 3 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.