வீட்டின் மீது மோதி நின்ற ஆம்புலன்ஸ்
வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை மருத்துவமனைக்கு செல்வதற்காக திருப்பத்தூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை புதுக்கோட்டையை சேர்ந்த பழனி முருகன் (வயது 28) ஓட்டினார். செவிலியராக விருதுநகர் பகுதியை சேர்ந்த கவிதா உடன் இருந்தார். எஸ்.வி.மங்கலம் கிழக்கிபட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி அங்கு இருந்த ஒரு வீட்டின் மீது மோதி நின்றது. இதில் டிரைவர் பழனி முருகன், நர்ஸ் கவிதா லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.