அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா
வாலாஜா அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
வாலாஜாவில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, கல்லூரி முதல்வர் சீனிவாசன், விடுதி காப்பாளர் மாலதி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.