அம்பேத்கர் பேனர் கிழிப்பு:மாணவர்கள், போலீசில் புகார்
வீரபாண்டி அருகே அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டதாக மாணவர்கள் போலீசில் புகார் ெகாடுத்தனர்.
வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக கடந்த 12-ந்தேதி இரவு வீரபாண்டி அருகே சட்டக்கல்லூரி முன்பு மாணவர்கள் அவரது உருவப்படம் பொறித்த பேனர் வைத்தனர். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது. எனவே பேனரை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.