அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை வெளியீடு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.;
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து காவல் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக அவர் விசாரணை நடத்திவரும் நிலையில் சிபிசிஐடியும் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த சுபாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.