அம்பை கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
அம்பை கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.;
அம்பை:
அம்பை கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி குழு செயலாளர் தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா ஆண்டறிக்கை வாசித்தார். பாளையங்ேகாட்டை தூய யோவான் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் கலந்து கொண்டு, 261 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
விழாவில் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் அருணாசலம், பள்ளி, கல்லூரி குழு தலைவர் செல்வராஜ், செயலாளர் சுப்பிரமணிய மழவராயர், கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் வேலையா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.