அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கி வரும் நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கி வரும் நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-08 16:38 GMT

தளி,

அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கி வரும் நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை கொடுக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. அணையின் நீர்இருப்பும் கிடுகிடுவென உயர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் 87 அடியை கடந்தது.

வெள்ள அபாய எச்கரிக்கை

அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் 2-ம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.இதையடுத்து அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு உள்ளத்துடன் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அணை அதன் முழு கொள்ளளவை எட்டியவுடன் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறப்பதற்கு உண்டான சூழல் நிலவுவதால் கரையோர கிராமங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்