ஆழ்வார்திருநகரியில்மினி மாரத்தான் போட்டி

ஆழ்வார்திருநகரியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.;

Update: 2023-01-26 18:45 GMT

தென்திருப்பேரை:

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். போட்டி காமராஜர் சிலை அருகே தொடங்கி செம்பூர், வெள்ளமடம் வழியாக சென்று நாசரேத் ெசன்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆழ்வார்திருநகரி ஆற்றுபாலம் அருகே உள்ள காங்கிரஸ் கொடிக் கம்பத்தில் எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல் பா.ஜ.க. சார்பில் பஸ் நிறுத்தம் அருகே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்