ஆழ்வார்திருநகரிஈசான உச்சினி மாகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
ஆழ்வார்திருநகரி ஈசான உச்சினி மாகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா வியாழக்கிழமை நடக்கிறது.
ஆழ்வார்திருநகரி:
ஆழ்வார்திருநகரி ஈசான உச்சினி மாகாளி அம்மன் கோவில் 3-ம் ஆண்டு வருசாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் நடக்கிறது. காலை 7 மணி முதல் மகா கணபதி ஹோமம், சவுபாக்கிய லட்சுமி கும்ப பூஜை, சுதர்சன கும்ப பூஜை, நவக்கிரக கும்ப பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 9.30 மணி முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள், 108 சங்காபிஷேகம், 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு, மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 மணி முதல் அலங்கார மகா தீபாராதனை, மகேசுவர பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறுகிறது