ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வாா் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வாா் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது.

Update: 2023-03-27 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலைசந்தி நடைபெற்றது. தொடா்ந்து அம்பாள்கள் சமேத பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வாா் ஆகிேயார் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகில் எழுந்தருளினார். கொடிப்பட்டம் மாடவீதிகளில் வலம் வந்தது.

பின்னர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள், ஆச்சாா்ய புருஷா்கள், செயல் அலுவலர் அஜித், முன்னாள் அரங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து தோ்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தேரோட்டம்

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் திருவீதி உலா நடைபெறும். வரும் 31-ந்தேதி கருட சேவையும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 4-ந் தேதியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார், உபயதாரர்கள் மற்றும் ஊா்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்