குன்னூர் அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குன்னூர் அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குன்னூர்
குன்னூர் அருகேயுள்ள சோகத்தொரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1950-ம் ஆண்டில் படித்த மாணவ- மாணவிகள்சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்பல்வேறு இடங்களில் இருந்து வந்து முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர். அப்போது பள்ளியில் படித்த நண்பர்களை சந்தித்து பழங்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும், இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்வதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் மூதாட்டி ஒருவர் பள்ளியில் படித்த பாடலை பாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தார். இதில் 50-க்கும், மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தற்போதைய தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.