முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Update: 2022-06-19 18:34 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. பவள விழாக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் மற்றும் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பவள விழாக் குழு உறுப்பினர் சந்திரசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது என தீர்மானிக்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் என்ற வகையில் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ரூ.1 லட்சமும், முன்னாள் அமைச்சர் தென்னவன் ரூ.1 லட்சமும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ரூ.1 லட்சமும், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை ரூ.1 லட்சமும், எம்.கே.சுந்தரம் செட்டியார் அன் சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ரூ.50 ஆயிரமும், காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் கலா மற்றும் தெய்வானை இளமாறன் ஆகியோர் தலா ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கினர்.கூட்டத்தில் முன்னாள் மாணவ மாணவியர்கள் அமைப்பிற்கான புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்