முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருப்பத்தூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-30 18:19 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2003-2004ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் கே.திருஞானம் உள்ளிட்ட 15 ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் 60 பேர் சேர்ந்து பள்ளி கட்டிட நிதியாக ரூ.1 லட்சம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் எ.ஆர்.பிலால், பார்த்திபன், சுதா மற்றும் திவ்யா செய்திருந்தனர். அரசு பள்ளியில் படித்து அமெரிக்காவில் இருக்கும் மாணவிகள் இதற்காக நேரில் வந்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்