முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நத்தத்தில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-13 21:00 GMT

நத்தத்தில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1973-ம் ஆண்டு பிளஸ்-1 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில், ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்த நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து ஒவ்வொருவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். அப்போது தங்களது பள்ளிக்கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, அதனை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள், அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்