முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சங்கரன்கோவிலில் அரசு பள்ளி மாணவர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-23 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தெற்கு ரதவீதி சிவந்தி வாசலில் இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியில் 1981 முதல் 1985 வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி மேல ரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த பள்ளியில் பயின்ற செண்பகவல்லி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தற்போது சென்னையில் கர்நாடக இசைப்பள்ளி நடத்தி வருகிறார். அவர் சேவைக்காக ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்று உள்ளார். நிகழ்ச்சியில் அவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டமுத்து, பத்மநாதன், அருணகிரி, கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்