முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆழ்வார்குறிச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-12-30 18:45 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வணிகவியல் பயின்ற கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் நிறுவனர் அனந்த ராமன் சேஷன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பரம கல்யாணி திருமண மண்டபத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தங்கள் துறை பேராசிரியர்களை கவுரவித்து நினைவுப்பரிசுகள் வழங்கினர்.. மேலும் துறை பேராசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மலரும் நினைவுகள் குறித்து பேசினர். பின்னர் தான் பயின்ற கல்லூரி வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு நினைவுகளை அசை போட்டு கொண்டனர். நிகழ்ச்சியில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்