முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டு அமைத்தல், பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், கணினி, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.