முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம்

நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம் நடந்தது.;

Update: 2023-01-18 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் ஜேசுஜெகன் தலைமை தாங்கினார். உபதேசியர் ஜேசுகுட்டி தாலத் ஆரம்ப ஜெபம் செய்தார். முதல்வர் வில்சன் வரவேற்றார். கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவர் மயில் ராஜன், செயலாளர் சாந்தகுமார், துணை செயலாளர் யுனேசிகிளாரா, பொருளாளர் பிரின்ஸ், துணை பொருளாளர் டோமினிக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் தங்கள் படிக்க வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஸ்டான்லி நன்றி கூறினார். சுரேஷ் சாலமோன் ஜெபம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்