மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Update: 2022-11-09 19:31 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் முன்னிலையில் நேற்று மாற்றுக்கட்சிகளை சேர்ந்த களக்காடு தெற்கு வட்டாரம் மாவடியை சேர்ந்த ரவிக்குமார், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வேணி தினேஷ், மூங்கிலடியை சேர்ந்த ராஜா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., களக்காடு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ், நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், மகிளா காங்கிரஸ் கமலா, பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்