அ.தி.மு.க.வில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்
சிவகிரியில் அ.தி.மு.க.வில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்.
சிவகிரி:
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்திபாண்டியன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சிவகிரி நகர செயலாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 200 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சிவகிரி மேலரத வீதியில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகிரி நகர அ.தி.மு.க. துணைச்செயலாளர் சமுத்திரவேலு, பொருளாளர் செந்தில் வேல்குமார், மாவட்ட பிரதிநிதிகள் குருவம்மாள், குருசாமி, அரங்கமோகன், வார்டு செயலாளர் ஜெயகுரு, மாரியப்பன், புல்லட் குமார், எஸ்.எஸ்.மணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.