மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-08-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாற்றுக்கட்சியினர் 50 பேர் சார்லஸ் தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு தொடர்பான பிரசார வாகனங்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இந்த வாகனங்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்