மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சீர்காழியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Update: 2023-07-30 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டநாதபுரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் பாரதி, மகளிர் அணி செயலாளர் சக்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர கழக செயலாளர் வினோத் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மார்கோனி ஏற்பாட்டின் பேரில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்பொழுது கட்சியில் இணைந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. சால்வையை அணிவித்து எதிர்காலத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அ.தி.மு.க. நகர கழக செயலாளர் செந்தமிழன், ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, வக்கீல்கள் தியாகராஜன், பாலாஜி, கட்சி நிர்வாகிகள் பாலு, கோகுல்குமார், ராஜசேகரன், பாலமுருகன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்