பா.ஜ.க.- அ.தி.மு.க போர்: மாறி மாறி கட்சி தாவும் பிரமுகர்கள்? அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்

பா.ஜ.க.தானாக யாரையும் அழைக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-02-27 08:08 GMT

திருப்பூர்,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நடைபயணம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண் என் மக்கள் வெற்றி விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், திருப்பூரில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள். எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். முக்கியப்புள்ளிகள் வரும்போது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இணைக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கியப்புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. பா.ஜ.க.கூட்டணியே வேண்டாம் என்ற அ.தி.மு.க.,தான் நாள் தோறும் பா.ஜ.க...பா.ஜ.க...என புலம்பி வருகிறது. பா.ஜ.க. தானாக யாரையும் அழைக்கவில்லை. காலையில் இருந்து பா.ஜ.க.வை பற்றிதான் அவர்கள் பேசி வருகிறார்கள். பிரதமர் ஐயா வந்துபார்க்கும்போது, 'எப்படி பல்லடத்தில் தாமரை கடல் அலை வந்தது' என நினைக்கும் அளவுக்கு கூட்டம் கூடிவருகிறது  என்றார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்