கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் ஊர்காவல் பைரவர் சுவாமி கோவில் 4-ம் ஆண்டு பொங்கல், கொடை விழா நடைபெற்றது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், பொங்கலிடுதல், சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வர்த்தக கழக பொதுசெயலாளர் வெள்ளைச்சாமி நாடார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.