சுற்றுச்சுவர் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு

பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கி, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்தது.

Update: 2023-02-17 18:45 GMT

கிணத்துக்கடவு

பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கி, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்தது.

வேலாயுதசாமி கோவில்

கிணத்துக்கடவில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தபோது, கொரோனா பரவல் காரணமாக கோவிலில் நடைபெற இருந்த புனரமைப்பு பணிகள் தடைபட்டது.

தற்போது பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.

4 மாதத்திற்குள் முடிக்க...

முதற்கட்டமாக மலை மீது உள்ள அந்த கோவிலை சுற்றி 7 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

நேற்று நூல் கட்டி அளவீடு செய்து அடையாளம் போடப்பட்டது. இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியை 4 மாதத்திற்குள் முடிக்க இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் பணி வேகமாக நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிவடைந்ததும் வர்ணம் பூசுதல், தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்