ரூ.3¾ கோடியில் அங்கன்வாடி, வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ரூ.3 கோடியே 85 லட்சம் செலவில் அங்கன்வாடி மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் ெதரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ரூ.3 கோடியே 85 லட்சம் செலவில் அங்கன்வாடி மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் ெதரிவித்தார்.
ஊராட்சிக்குழு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள்
கூட்டத்தில் தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் பேசியதாவது:-
மாவட்ட ஊராட்சி குழுவிற்கு மாநில நிதி குழு மூலம் 6 அங்கன்வாடி கட்டிடம் மற்றும் 5 இரு வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இதேபோன்று மத்திய நிதி குழு மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், மழைநீர் கால்வாய் கட்டரூ.1 கோடியே 43 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகள்
அதன்படி இரண்டு அறை வகுப்பறைகள் கட்ட ஆலங்காயம் இளைய நகரம், வாணியம்பாடி திம்மம்பேட்டை நாட்டறம்பள்ளி பச்சூர், ஆலங்காயம் பூங்குளம், கந்திலி பெரிய கண்ணால பட்டி, ஆகிய பகுதிகளிலும் மாதனூர் விண்ணமங்கலம், நாய்க்கனேரி, திருப்பத்தூர் வெங்காய பள்ளி, குரிசிலாப்பட்டு, மட்றபள்ளி, ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது பிரியதர்ஷினி ஞானவேல், கவிதா தண்டபாணி, முனிவேல், சுபாஷ்சந்திரபோஸ், பொது நிதியிலிருந்து பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்படுமா? என கேட்டனர்
அதற்கு உதவி இயக்குனர் விஜயகுமாரி கூறுகையில், பொது நிதியில் தற்போது பணம் ஒதுக்கப்படவில்லை விரைவில் நிதி கிடைத்தவுடன் அனைத்துபணிகளும் செய்ய நிதி ஒதுக்கப்படும்.
கடந்த முறை மாநில, மத்திய, நிதி குமு மூலம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.40 லட்சத்தில் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.