ெரயில்வே மேம்பால நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு

ெரயில்வே மேம்பால நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-08 21:34 GMT


விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே லெவல் கிராசிங் 427-ல் மேம்பாலம் அமைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதின் பேரில் தமிழக அரசால் இதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணியானது வருவாய்த்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிலம் மற்றும் கட்டுமானங்களுக்குரிய இழப்பீட்டு தொகையினை தொடர்புடைய நில உடைமைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி ரூ.5 கோடி 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலம் உடைமைதாரர்களுக்கான இழப்பீட்டுத் தொகையானது இம்மாத இறுதிக்குள் உரிய நபர்களுக்கு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும். விரைவில் மேம்பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்