கூட்டணியா...? தனித்து போட்டியா...? - அண்ணாமலையுடன் ஈபிஎஸ் தரப்பு சந்திப்பு...!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர்.;

Update: 2023-01-21 10:05 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தெரிவித்தார்.

இதனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாலையை இவர்கள் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்