குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றுக்கூறி உறுதி மொழி ஏற்க மறுத்து ஊராட்சி தலைவருடன் ெபண்கள் வாக்குவாதம்-மருதூர் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றுக்கூறி மருதூர் கிராம சபை கூட்டத்தில் உறுதி மொழி ஏற்க மறுத்து ஊராட்சி தலைவருடன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
காரமடை
குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றுக்கூறி மருதூர் கிராம சபை கூட்டத்தில் உறுதி மொழி ஏற்க மறுத்து ஊராட்சி தலைவருடன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
கோவை மாவட்டம் கரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தில் அனைத்து ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதன்படி மருதூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் மகாலட்சுமி நகரில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன், துணைத் தலைவர் தேன்மொழி, பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேளாண்துறை, துறை காவல் துறை ஆகிய அரசு துறைகளில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சிக்குட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் கொண்டனார். கிராம சபையில் தெரு விளக்குகள், தூய்மை பணி மேற்கொள்வது உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டது.
வாக்குவாதம்
கிராம கூட்டத்தில் என் குப்பை என் பொறுப்பு, குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் ஒப்படைப்பேன். எப்போதும் என் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பேன் என உறுதி ஏற்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வெறும் உறுதி மொழி எடுத்துக் கொள்வதால் பயனில்லை என்று ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று சிக்காரம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் காலட்டியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், துணைத் தலைவர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர் தனசீலன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.