நிலத்தை அபகரித்ததாக புகார்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

நிலத்தை அபகரித்ததாக அளித்த புகார் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-20 18:45 GMT

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார்பதிவாளர் அம்பிகா மாவட்ட பதிவாளர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் மனு அளித்தார். அதில், பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் சிவக்குமாருக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து, அந்த சொத்தை அதே ஊரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மதியழகன், அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகிய 2 பேரும் அபகரித்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்