நிலங்களை போலியாக பதிவு செய்ததாக நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு : குறை தீர்க்கும் நாள்

நிலங்களை போலியாக பதிவு செய்ததாக நிதி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Update: 2022-12-19 19:18 GMT

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டி, வெட்டுக்காடு, ராப்பூசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திரண்டு வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், தங்களது பூர்வீக சொத்துக்களான வீடுகள், தரிசு நிலங்கள், விவசாய நிலங்களை தனியார் நிதி நிறுவனம் பெயரில் போலியான பதிவு செய்திருப்பதாகவும், சிலரது நிலங்களை பவர் பத்திரம் போட்டிருப்பதாக குற்றம்சாட்டியும், இதனை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

100 நாள் வேலை திட்டம்

ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் அளித்த மனுவில், தங்களது பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதில்லை என்றும், வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 490 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்