அரியலூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்-ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்

அரியலூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-08-09 19:10 GMT

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். செயலாளர் நல்லதம்பி ஆண்டறிக்கை மற்றும் செலவு திட்டங்களை வாசித்தார். இதில், மாநில தலைவர் மாணிக்கம் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிகாலம் மத்திய அரசு போல் 20 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும். அரியலூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்