கோவில் சொத்துகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்படும் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் பேட்டி

கோவில் சொத்துகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்படும் என திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் பேட்டி அளித்தார்.

Update: 2023-04-20 19:17 GMT

கரூரில் நேற்று திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பது குறித்து ஏற்கனவே 4 முறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவும், முன்னேற்றம் குறித்து இன்று (அதாவது நேற்று) தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் பார்வையிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட நிலுவை பணிகள் உள்ளன.

பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் யார்? என்று கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறி ஒப்பு நோக்கு பட்டியல் மாநிலம் முழுவதும் அந்தந்த மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர் மூலமாக கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவேட்டின் படி இல்லாமல், பல இடங்களில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியல் திருக்கோவில் நிர்வாகத்தினருக்கே தெரியாமல் இருக்கிறது. ஏறக்குறைய இன்னும் 5 லட்சம் ஏக்கர் நிலங்களை கூடுதலாக மீட்கப்பட வேண்டி உள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இன்னும் அடுத்த ஐந்தாண்டு காலங்களுக்குள் முன்மாதிரியாக செயல்படுத்தப்படும், என்றார். முன்னதாக இவர், கரூர் ரத்தினம் சாலை பகுதியில் உள்ள கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்