சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர்
சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்டத்தில் நாளை (04.02.2023) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.