மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-08 11:47 GMT

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியை தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சென்னையில் ஒரு ஒப்பந்ததாரரே பல இடங்களில் வேலையை எடுத்து நடத்துவதால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்ததாரராக இருப்பதால் அவரே பணிகளை எடுத்து கொள்கிறார். அவரிடம் காலதாமதம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

வடக்கிழக்குபருவ மழை தொடங்கும் முன்பு பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 90 நாட்களில் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்