அதிமுக கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முந்தைய அதிமுக அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-02-22 07:13 GMT

சென்னை,

திருவாரூர் மன்னார்குடியில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னையே அறியாமல் கம்பீரமாக இருக்கிறேன். திருவாரூர் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது அண்ணா தலைமையிலான திமுக அரசு. மக்கள் போற்றும் திராவிடமாடல் ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி உங்களுடைய ஆட்சி. அரசு அறிவித்த திட்டங்கள் உரிய முறையில் நடக்கிறதா என்பதை கவனித்து நடவடிக்கை எடுக்கக்கூடியவன்தான் இன்று நீங்கள் பெற்றிருக்கும் முதலமைச்சர்.

கள ஆய்வி முதல்-அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறேன். பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும்.

கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவெற்றப்பட்டிருக்கும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும். 

வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுகள் உள்ளது என்பதால் அதுவரை பொறுத்திருங்கள் என நான் கூறவில்லை. மீதமிருக்கும் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்