அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்

பொதுத்தேர்வுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறினார்.;

Update:2023-03-12 01:16 IST


பொதுத்தேர்வுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறினார்.

பொதுத்தேர்வுகள்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பின்படி பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வுகள் வருகிற 13 மற்றும் 14-ந் தேதி நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 44 தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும், ஒரு தனித் தேர்வர் மையமும் அமைக்கப்படுகிறது.

மேற்கண்ட தேர்வுகளில் வருவாய் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வினை 23,328 மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 தேர்வினை 22,036 மாணவ- மாணவிகளும் எழுத உள்ளனர். மேலும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக பிளஸ்-2 வகுப்பில் 105 தேர்வர்களும், பிளஸ்-1 வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

பறக்கும் படை

தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பாளர்களும், 104 துறை அலுவலர்களும், 1,236 அறை கண்காணிப்பாளர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுவதற்காக 110 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்