வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

Update: 2022-08-26 16:32 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் மணி, அ.தி.மு.க. நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன், தெற்கு செயலாளர் யோக வாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் காத்தமுத்து, ஒன்றிய செயலாளர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்தை முன்வைத்தனர். குறிப்பாக ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகள் நீண்ட தொலைவில் உள்ளதாகவும், ஒரே வீட்டில் தந்தை, மகனுக்கு வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் விதமாக வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இவை அனைத்தும் சரி செய்யப்படும் என ஆர்.டி.ஓ. தெரிவித்தார். கூட்டத்தில் திருச்சுழி தாசில்தார் சிவகுமார், விருதுநகர் தாசில்தார் செந்தில்குமார், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்