ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update:2022-09-30 02:55 IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சப்பாளியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திலும், இந்து முன்னணி கட்சி அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்