அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

வனத்துறையினரை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-14 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேகமலை வனச்சரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், மதுபோதையில் கல்லூரி மாணவரை தாக்கியதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வீரையா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வனத்துறையினரை கண்டித்தும், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அதுபோல், சி.ஐ.டி.யு. உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில், ஊராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்