ராமநத்தத்தில்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பரப்புரை பயணம்
ராமநத்தத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பரப்புரை பயணம் மெற்கொண்டனா்.
ராமநத்தம்,
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், வேலை கொடு அல்லது வேலை கொடுக்கும் வரை ரூ.10 ஆயிரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டம் ராமநத்தத்துக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு வரவேற்பு அளித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஆகாஷ் தலைமை தாங்கினார். மாணவர் மன்ற மாநில தலைவர் தினேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகக்குழு சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் எம். நிதிஉலகநாதன், நல்லூர் ஒன்றிய செயலாளர் முருகையன், ஒன்றிய துணை செயலாளர் தேவா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், குப்புசாமி, மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.