அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜோசி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சண்முகம் விளக்க உரையாற்றினார். இதில் பல்வேறு கோரிக்கை குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் சுப்பையா, ரங்கசாமி, சோலை, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.