அனைத்து பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் என அறிவிக்க வேண்டும் -மதுரையில், சச்சின் சிவா பேட்டி

அனைத்து பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் என அறிவிக்க வேண்டும் என்று மதுரையில், சச்சின் சிவா பேட்டி அளித்தார்

Update: 2023-04-19 20:35 GMT


அரசு பஸ்சில் நடந்தது குறித்து இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா, மதுரையில் கூறியதாவது:- சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்காக பஸ் நிலையம் வந்தேன். அந்த பஸ்சில் கழிவறை வசதி இருந்தது. அந்த பஸ்சில் நான் ஏற முயன்றபோது, அப்போது பணியில் இருந்த கண்டக்டர், என்னுடைய மாற்றுத்திறனாளி பஸ் பாஸ் அட்டை இந்த பஸ்சில் செல்லாது எனவும், வேறு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்றார். மேலும், தொடக்கத்தில் இருந்தே என்னிடம் மரியாதைக்குறைவாகவே அவர் பேசி மிரட்டினார்.

ஏ.சி. பஸ் தவிர அனைத்து பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் இருக்கிறது. ஆனால் அதிகாரிகளும், கண்டக்டர்களும் எங்களுக்கான சலுகைகளை மறுக்கிறார்கள். அதாவது, ரூ.400 டிக்கெட் கட்டணம் வந்தால், அதில் ரூ.100 நாங்கள் கொடுக்கிறோம். மீதமுள்ள பணத்தை போக்குவரத்து கழகத்திற்கு அரசு செலுத்தி விடுகிறது. இது தெரிந்தும் கண்டக்டர்கள், எங்களை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். இதுபோல், மாற்றுத்திறனாளிகள் யாரும் பாதிக்கக்கூடாது. 3 மாதங்களுக்கும் முன்பு இதுபோல் எனக்கு நடந்தது. மீண்டும் அதே சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. என்னைபோல் எத்தனை மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? எனவே எல்லா பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் அல்லது சலுகைகள் உண்டு என அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்