மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-10 18:45 GMT

கொட்டாம்பட்டி, 

கொட்டாம்பட்டி பகுதிகளில் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கொட்டாம்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கருங்காலக்குடியில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த சென்னகரம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள், ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்